ஈரான் அதிபர் தேர்தலில் 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றி..!
ஈரானில் அதிபர் தேர்தல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் (Hassan Rouhani) பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் அதிபருக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்தலில் ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர்.
இதில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனினியின் ஆதரவாளராக செயல்பட்ட 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றிப்பெற்றார். 90 சதவீத வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டுள்ள நிலையில், அதில் 62 சதவீத வாக்குகளை ரைசி பெற்றுள்ளார்.
Comments