விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி, 30 ஆண்டுகளுக்கு பிறகும் செயல்படக்கூடிய திறனுடனே உள்ளன - நாசா
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி, 30 ஆண்டுகளுக்கு பிறகும் செயல்படக்கூடிய திறனுடனே இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து கடந்த 1990 ஏப்ரல் 24-ஆம் தேதி ஹப்பிள் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தின.
கடந்த 30 ஆண்டுகளாக பிரபஞ்சத்தை படம்பிடித்துவரும் இந்த தொலைநோக்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள நாசா, கணினி பிரச்னை காரணமாகவே ஹப்பிள் தொலைநோக்கி வேலை செய்யவில்லை என்றும், தொலைநோக்கியும் அதிலுள்ள கருவிகளும் செயல்படக்கூடிய திறனுடனே இருப்பதாவும் தெரிவித்துள்ளது.
Comments