ZyCoV-D தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கோர திட்டம்
தனது ZyCoV-D தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கோரி, Zydus Cadila மருந்து நிறுவனம் அடுத்த வாரம் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை அணுகும் என தகவல் வெளியாகி உள்ளது.
அனுமதி வழங்கப்பட்டால், இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 4 ஆவது தடுப்பூசியாகவும் அது இருக்கும். 3 ஆம் கட்ட சோதனை முடிவுகள் தயாராக இருப்பதாகவும் Zydus Cadila தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பெரியவர்கள் மட்டுமின்றி 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடமும் சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்த முடிவை எடுக்க இந்த சோதனை முடிவுகள் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ZyCoV-D மூன்று டோஸ் தடுப்பூசியாகும். 2 முதல் 4 டிகிரி செல்சியஷிசில் இருப்பு வைக்கலாம் என்பதால், குளிர்பதன கிடங்குகளின் தேவையின்றி, நாட்டின் மூலை முடுக்குகளிலும் இந்த தடுப்பூசியை போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments