ஆன்லைனில் வகுப்புகள்-மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பெற்றோர்களுக்கான வழிகாட்டல் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
ஊரடங்கு காலத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கும் நிலையில், மாணவர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படாமல் இருக்க பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டல் விதிகளில், இந்த காலகட்டத்தில் வீடு தான் முதல் பள்ளி என்றும் பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான, நேர்மறையான சூழலை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை வயது வாரியாக கண்காணித்து, தேவைகளை கேட்டறிந்து, பெற்றோர் வழிநடத்த வேண்டியது அவசியம் உள்ளிட்ட வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Comments