மேலும் என்னென்ன தளர்வுகள்? முதலமைச்சர் ஆலோசனை

0 6143
மேலும் என்னென்ன தளர்வுகள்? முதலமைச்சர் ஆலோசனை

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறு நாளுடன் முடிவடைகிறது.

ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் 27 மாவட்டங்களில் ஏற்கனவே கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கபட்டிருந்தன.

தற்போது பெரும்பாலான மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால், 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? அல்லது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளை அமல்படுத்தலாமா? உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பெரும்பாலான கடைகள், கட்டுமான பணிகள் இயங்க அனுமதிக்கபட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிறிய நகை மற்றும் ஜவுளிக் கடைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படும் எனவும், கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பகலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், வீட்டுக்கு அருகேயுள்ள சிறு, சிறு கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments