யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் : சுவீடன் அணி வெற்றி

0 4186
யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் : சுவீடன் அணி வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் சுவீடன் அணி 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியா அணியை வென்றது.   

இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா -செக் குடியரசு அணிகள் மோதிய லீக் ஆட்டங்கள் சமனில் முடிந்தன. 

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகர மைதானத்தில் நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா, சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இரு அணி வீரர்களும் கோல் போட மல்லுக்கட்டியதால் முதல் பாதியில் ஒரு கோல் கூட விழவில்லை.

தொடர்ந்து 2-வது பாதி ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை சுவீடன் வீரர் Emil Forsberg கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இறுதியில் சுவீடன் அணி 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியா அணியை வென்றது.   

ஸ்காட்லாந்தில் நடந்த குரேஷியா, செக் குடியரசு அணிகளுக்கு இடையிலான டி பிரிவு லீக் ஆட்டம் வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிந்தது.

முதல் பாதி ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் செக் குடியரசு வீரர் Patrik Schick பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் திருப்பினார்.

தொடர்ந்து 47-வது நிமிடத்தில் குரேஷியா வீரர் Perisic அட்டகாசமாக கோல் திருப்பி ஆட்டத்தை சமன் செய்தார். இறுதியில் ஆட்டம் 1-க்கு 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 

லண்டனில் நடந்த இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான மற்றொரு டி பிரிவு லீக் ஆட்டமும் சமனில் முடிந்தது. மழையின் குறுக்கீட்டிற்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்ற நிலையில் இரு அணி வீரர்களும் கோல் போட மல்லுக்கட்டினர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த 2-ஆம் பாதி ஆட்டத்திலும் கோல் விழாத நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments