பஞ்சாப்பில் ஒட்டிய உடலுடன் கூடிய இரட்டை இளைஞர்கள் தனித்தனியாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பம்

0 8390
பஞ்சாப்பில் ஒட்டிய உடலுடன் கூடிய இரட்டை இளைஞர்கள் தனித்தனியாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பம்

ஞ்சாப்பில் ஒட்டிய உடலுடன் கூடிய இரட்டை இளைஞர்கள் தனித்தனியாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு பிறந்த அவர்களுக்கு தலை, மார்பு, இதயம், நுரையீரல், முதுகெலும்பு தனித்தனியாகவும், சிறுநீரகம், கல்லீரல், சிறுநீர்ப்பை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் ஒரு நபருக்கு உள்ளது போன்று அமைந்திருந்தது. 

நீண்ட நாட்கள் பிழைக்கமாட்டார்கள் என்று அவர்களது உறவினர்கள் மட்டுமின்றி மருத்துவர்களே கூறினர்.

இதனால் அவர்களை வளர்ப்பதற்கு பெற்றோர் மறுத்த நிலையில் பிபி இந்தர்ஜித் கவுர் என்பவர், தான் வளர்ப்பதாக தெரிவித்து சோஹ்னா - மோகனா என்ற பெயரையும் சூட்டினார். 

இந்நிலையில் தற்போது பெரியவர்களாகி பட்டப்படிப்பை முடித்து விட்டதால் தனி வாக்குரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments