நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்

0 8674
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விமானம் மூலம் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

சிவா இயக்கத்தில் அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார்.

பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்லாமல் இருந்தார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அங்கு சென்று உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து இன்று அதிகாலையில் அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments