இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் ரத்து
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது.
இங்கிலாந்தின் சவுதம்டன் நகரில் இந்திய நேரப்படி நேற்று மாலை மூன்று முப்பது மணிக்கு ஆட்டம் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அங்கு காலை முதல் மழை கொட்டியதால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தடைபட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போட முடியாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஒருவேளை ஐந்து நாட்களில் முடிவு கிடைக்காமல், ஓவர்கள் வீச வேண்டிய அவசியம் இருந்தால், ஐசிசி கொண்டு வந்த விதிமுறைகளின் படி மாற்று நாளான ‘ரிசர்வ் டே ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments