டிவிட்டர் நிறுவனம் இந்தியாவின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு கடும் எச்சரிக்கை
டிவிட்டர் நிறுவனம் இந்தியாவின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், டிவிட்டர் நிறுவனம் தனக்கென வகுத்த கொள்கைகளையே பின்பற்றுவதாகவும், தனிநபர் கருத்து சுதந்திரத்தையும், உரிமைகளையும் மதிப்பதாகவும் அதன் பிரதிநிதிகளின் விளக்கம் அளித்தனர்.
இந்தியாவில் செயலாற்றுவது எப்படி என்றும் கொள்கை ரீதியான முடிவுகள் எடுப்பது எப்படி என்றும் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி நாடாளுமன்ற நிலைக்குழுவினர் வலியுறுத்தினர்.
சட்டத்தை மதிக்காத டிவிட்டர் நிறுவனத்திற்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது என்றும் எம்பிக்கள் கேட்டனர்.
தாங்கள் சட்டங்களை மதிப்பதாகவும், மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையின்படி குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் டிவிட்டர் நிர்வாகிகள் பதிலளித்தனர்.
Comments