பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குச் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 6 வாரத்தில் இறுதி அறிக்கை அளிக்க உத்தரவு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் புலன் விசாரணையை முடித்து 6 வாரத்தில் தொடர்புடைய நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 113 சாட்சிகளிடம் விசாரித்து வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளதாகவும், ஊரடங்கால் தடயவியல் அறிக்கையைப் பெற முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 வார காலக்கெடு வேண்டும் என சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரி கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக அமைத்த விசாகா குழு, தனது அறிக்கையை உள்துறைச் செயலாளரிடம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
Comments