கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை

0 3572
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை

ர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தட்சிண கன்னடம், உடுப்பி, உத்தர கன்னட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் எனச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடகு, ஹசன், சிக்கமகளூர், சிவமோகா மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments