தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...
நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் உள்ளதால், அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அரசுப் பள்ளிகள் மூலம் நீட் தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் மீண்டும் தொடங்கி உள்ளதாக கூறப்படுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என ஓபிஎஸ் கூறியிருந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் உள்ளதால், அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தனியார் நீர் பயிற்சி மையங்களின் கட்டண குறைப்பு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார். அதேசமயம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தென் சென்னையில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, திட்டமதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிக்க பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
Comments