நடிகையின் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனைப் பிடிக்க மதுரை விரைந்தது தனிப்படை

0 4524
நடிகையின் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனைப் பிடிக்க மதுரை விரைந்தது தனிப்படை

டிகையின் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய மதுரைக்கு இரண்டு தனிப்படைகள் விரைந்துள்ளன.

நடிகை ஒருவர் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதுடன், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து போலீசார் அவரை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். அந்த அடிப்படையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுரையில் மணிகண்டனைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments