தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

0 6375
ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தொற்று அதிகம் உள்ள, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைந்த  அளவிலான தளர்வுகளும், ஏனைய 27 மாவட்டங்களில் கூடுதல்  தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரும் 21 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

பொது போக்குவரத்துக்கு அனுமதி, சிறிய ஜவுளி கடைகளுக்கு அனுமதி, சிறிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, கடைகளுக்கான நேர அனுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட தளர்வுகள் வழங்கப்படலாம் என கூறபடுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments