இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 96,000 பேரைப் பணியமர்த்த உள்ளதாக நாஸ்காம் தகவல்
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் 96 ஆயிரம் பேரைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டுக்குள் பணியாளர்கள் 30 லட்சம் பேரை ஆட்குறைப்புச் செய்யவும், இதன்மூலம் ஆண்டுதோறும் ஊதியமாகச் செலுத்தும் 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயைச் சேமிக்கவும் திட்டமிட்டுள்ளதாகப் புதனன்று பாங்க் ஆப் அமெரிக்கா ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அதற்கு மாறாக இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் முதன்மையான ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் 96 ஆயிரம் பேரைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Comments