மும்பையில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களின் கண்கள் அகற்றம்
மும்பையில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டன.
மூன்று குழந்தைகளும் 4, 6 மற்றும் 14 வயதுடையவர்கள் என்றும் அவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கும், இரு சிறுமிகளுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
அந்தத் தொற்று அதிர்ஷ்டவசமாக அவர்களின் மூளைக்குச் செல்லும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்களை அகற்றி உயிரைக் காப்பாற்றி விட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Comments