சென்னையில் தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி - மாநகராட்சி நிர்வாகம்
சென்னையில் நேரடி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேரடியாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத மாற்றுத் திறனாளிகள் உதவி எண்கள் மூலம் விபரத்தை தெரிவித்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மேலும் பேச்சு மற்றும் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் காணொலி மூலம் விபரம் தெரிவிக்க பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சென்னை மாநகராட்சி, தடுப்பூசி மையத்திற்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கோவிட் 19 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
உதவி எண்: 18004250111
காணொலி உதவி எண் (பேச்சு மற்றும் செவித் திறனற்றவர்களுக்கு மட்டும்): 9700799993.#VaccineSavesLives #GCC@GSBediIAS pic.twitter.com/uahP6OxEMT
Comments