வேலைக்கு சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளர்கள்..

0 14944
கோவை மாவட்டம் அன்னூர் அருகே, வேலைக்கு சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே, வேலைக்கு சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசூர் பட்டறையில் கேரளாவை சேர்ந்த மொய்தீன் குட்டி, சமீர், சிகாபுதீன் ஆகிய மூன்று பேர் சேர்ந்து பேக்கரி நடத்தி வந்துள்ளனர். அந்த பேக்கரியில், திருச்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும், அவரது கணவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பேக்கரி பூட்டப்பட்டதால் பெண்ணின் கணவர் வேறு வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், பேக்கரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பேக்கரி உரிமையாளர்கள் 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இருவரை துடியலூர் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவான மொய்தீன் குட்டியை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments