டிவிட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய ஐடி சட்டங்களை திட்டமிட்டே மதிக்கவில்லை - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
டிவிட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய ஐடி சட்டங்களை திட்டமிட்டே மதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் புதிய வழிகாட்டல்களை அது பின்பற்றவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 5ம் தேதி டிவிட்டர் நிறுவனம் விதிகளைப் பின்பற்றாவிட்டால் தடை செய்யப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மற்ற சமூக ஊடகங்கள் விதிகளைப் பின்பற்ற ஒப்புதல் தெரிவித்த நிலையில் டிவிட்டர் நிறுவனம் மட்டும் தெரிந்தே சட்டங்களை மதிக்கவில்லை என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சாடியுள்ளார்.
பிரதமர் உள்பட யாரையும் விமர்சிக்கலாம் என்றும், ஆனால் இந்திய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும் கூறியுள்ள ரவிசங்கர் பிரசாத், அரசுக்கு அறிவுரை சொல்லாதீர்கள் என்று டிவிட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments