பிளஸ் 2 மதிப்பெண் முறை குறித்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

0 2620
பிளஸ் 2 மதிப்பெண் முறை குறித்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பீட்டு முறை எப்படி மேற்கொள்ளப்படும் என்பதை மத்திய உயர்நிலை பள்ளிக் கல்வி வாரியம் உச்ச நீதிமன்றத்தில் விளக்கமாகத் தெரிவித்துள்ளது.

அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களில் தலா 30 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் எழுதிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40 சதவீதமும் எடுத்துக் கொள்ளப்படும்.

10 மற்றும் 11ஆம் வகுப்பை பொறுத்தவரை, பருவத் தேர்வு எழுதிய 5 பாடங்களில், அதிக மதிப்பெண் எடுத்த 3 பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பிளஸ் 2 வகுப்பில், யூனிட் தேர்வு, பருவத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.  ஜூலை 31ஆம் தேதிக்குள், சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments