கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் - 26 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று தொடக்கம்
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான புதிய திட்டத்தை 26 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள சுமார் ஒருலட்சம் முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் இத்திட்டம் மூலம் ஆறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும்.
இதற்காக மத்திய அரசு 276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சுகாதாரத்துறையை சாராத திறன் மிக்க ஊழியர்களை சுகாதாரத்துறையில் இணைப்பதற்கு இத்திட்டம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
Comments