நந்திகிராம் தேர்தல் முடிவுக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழக்கு
மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து முதலமைச்சர் மமதா பானர்ஜி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் 294 தொகுதிகளில் 213 இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 2 ஆயிரத்துக்கும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடித்தார்.
இந்நிலையில் சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Comments