பூஸ்டர் ஷாட் எனப்படும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க ஸ்புட்னிக் முடிவு

0 4236
பூஸ்டர் ஷாட் எனப்படும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க ஸ்புட்னிக் முடிவு

ஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, பூஸ்டர் ஷாட் எனப்படும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை விரைவில் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

உருமாறிய டெல்டா வைரஸை குணப்படுத்தும் 'பூஸ்டர் ஷாட்'-ஐ, பிற தடுப்பூசித் தயாரிப்பாளர்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஸ்புட்னிக் முன்வந்துள்ளது.

இது குறித்து பேசிய ஸ்புட்னிக் வி உற்பத்தியாளர்கள், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை டெல்டா வைரசுக்கு எதிராக வேறெந்தத் தடுப்பூசியைக் காட்டிலும், ஸ்புட்னிக்-வி சிறப்பாக செயல்படுவதாகத் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments