அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்காத சமூக ஊடகங்களை தடை செய்யும் எண்ணமில்லை - மத்திய ஐ.டி. அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்காத எந்த சமூக ஊடகத்தையும் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய ஐ.டி. அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் அரசின் சட்டங்களை அனைவரும் பினபற்ற வேண்டும் என்பதில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.
டுவிட்டரின் சட்டரீதியான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், அது தடை செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், பிரதமர், குடியரசு தலைவர் என பாதி அரசும் டுவிட்டரில் உள்ளதாக கூறினார்.
சமூக ஊடக பயனர்களின் அனைத்து தரவுகளையும் பார்க்க அரசு விரும்பவில்லை என்ற அவர், அதே நேரம், தேசவிரோத, மதநல்லிணக்கத்துக்கு எதிரான பதிவுகள் வரும் போது அதை பதிவிட்டவர்கள் யார் என்பதை அறியும் கடமை அரசுக்கு உள்ளது என்று கூறினார்.
Comments