இந்த மாம்பழத்திற்கு சந்தையில் செம கிராக்கியாம்... இது திருடப்படாமல் இருக்க 6 நாய், 4 பாதுகாவலர்கள் நியமனம்...
உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழங்களை, திருட்டில் இருந்து பாதுகாப்பதற்காக மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதியினர் 6 நாய்களுடன் 4 பாதுகாவலர்களை நியமித்துள்ளனர்.
ஜப்பானின் மியாசகி பகுதியில் விளையும் ரகம் என்பதால், இந்த மாம்பபமும் மியாசகி என்றே அழைக்கப்டுகிறது. இதன் உற்பத்தி மிக குறைவு என்பதால், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ மாம்பழம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை விலை போவதாக கூறப்படுகிறது.
ரூபி நிறத்தில் வித்தியாசமாக இருக்கும் இந்த மாம்பழத்தின் சுவை மிக அதிகமாக இருப்பதுடன், கண் சோர்வைப் போக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளது.
ஒரு மாம்பழத்தை 21 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க நகை கடை உரிமையாளர் ஒருவர் முன்வந்த போதும், விற்பனை செய்ய தம்பதியினர் மறுத்து விட்டனர். தற்போதுள்ள 2 மாமரங்களை மேலும் அபிவிருத்தி செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments