காங். டூல்கிட் வழக்கில், ட்விட்டர் இந்தியா மேலாண் இயக்குநரிடம் விசாரணை
காங்கிரஸ் டூல்கிட் வழக்கில், ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம், டெல்லி போலீசார் பெங்களூரு சென்று விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா, காங்கிரசை குற்றம்சாட்டி வெளியிட்ட பதிவை, "திரிக்கப்பட்ட உள்ளடக்கம்" என ட்விட்டர் டேக் செய்திருந்தது. இதுகுறித்து ட்விட்டருக்கு விளக்கம் கேட்டு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி தனிப்படை போலீசார் கடந்த 31ஆம் தேதி பெங்களூரு சென்று, ட்விட்டர் இந்தியா மேலாண் இயக்குநர் மணீஷ் மஹேஸ்வரியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ட்விட்டர் இந்தியா மேலாண் இயக்குநரின் பதில் தெளிவில்லாமல் இருந்ததால் மூன்றாவது முறையாக ட்விட்டர் அலுவலகங்களுக்கு நோட்டீஸ் கொடுக்க சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments