சிறிது நேரம் இணைய செயலிழப்பால் பல நாடுகளில் முக்கிய சேவைகள் பாதிப்பு
சிறிது நேரம் இணையம் செயலிழந்ததால் இன்று பல நாடுகளில் வங்கி, விமான முன்பதிவு, பங்கு சந்தை உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பின.
ஹாங்காங் பங்குசந்தை, தனது இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு, பின்னர் சரியானதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் சேவையும் பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களின் முன்பதிவு சேவை சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது.
மசாசூசெட்சில் உள்ள இன்டர்நெட் சேவை நிறுவனமான அகாமாய்-ல் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் உலகின் முக்கிய வெப் சர்வீசஸ் நிறுவனமான Fastly-ன் மென்பொருளில் ஏற்பட்ட பிரச்சனையால், முக்கியமான வெப்சைட்டுகள் சிறிது நேரம் முடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
Comments