சிவசங்கர் பாபாவின் சுசில் ஹரி இன்டர்நேசனல் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழையும், செலுத்திய கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தரவும் கோரிப் பெற்றோர் விண்ணப்பம்
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபா நடத்தும் சுசில் ஹரி இன்டர்நேசனல் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்களை வாங்கவும், செலுத்திய கட்டணத்தைத் திருப்பித் தரவும் கோரிப் பெற்றோர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஒரு படிவத்தில் விவரங்களை நிரப்பிக் கொடுத்த பின் ஒரு வாரத்துக்குள் மாற்றுச் சான்றிதழைத் தருவதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்து வருகிறது.
அதேபோல் மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டுக்கு முன்கூட்டிச் செலுத்திய கல்விக் கட்டணத் தொகையைத் திருப்பித் தரும்படியும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
மாற்றுச் சான்றிதழையும் பணத்தையும் பெற முடியுமா என்கிற அச்சம் பெற்றோர்களிடம் எழுந்துள்ளது. பெற்றோர்களைப் பள்ளிக்குள்ளே விடாமல் வாயிலுக்கு வெளியே நிற்க வைத்து நிர்வாகத்தினர் பேசி அனுப்பி வருகின்றனர்.
Comments