இட்லி வாங்க வந்தது போல் நடித்து உணவக உரிமையாளரிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் !

0 3201

சென்னையில் இட்லி வாங்க வந்தது போல் நடித்து உணவக உரிமையாளரிடம் இருந்து 5 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற கொள்ளையனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சித்தாலப்பாக்கத்திலுள்ள ரங்கா என்ற உணவகத்துக்கு கடந்த 3 நாட்களாக சாப்பிட வருவது போல் வந்து நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர், மீண்டும் வந்து இட்லி ஆர்டர் கொடுத்துள்ளார். கடையின் உரிமையாளர் ராஜலட்சுமி பார்சல் கட்டிக் கொண்டிருக்கும் போது, பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பிய கொள்ளையர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

கொள்ளையர்களில் ஒருவன் மட்டும் பொதுமக்கள் கையில் சிக்கிக் கொண்ட நிலையில், தாலிச் செயினுடன் தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments