ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் வருவாய் 40சதவீதம் அளவுக்கு சரிவு; ஏற்கனவே போடப்பட்ட பட்ஜெட்டை மறுசீரமைக்க தேவஸ்தானம் முடிவு

0 2837
ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் வருவாய் 40சதவீதம் அளவுக்கு சரிவு; ஏற்கனவே போடப்பட்ட பட்ஜெட்டை மறுசீரமைக்க தேவஸ்தானம் முடிவு

ரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து, வருவாய் சரிந்துள்ளதால், 2-வது ஆண்டாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டை மறுசீரமைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வழக்கமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆயிரம் கோடிக்கு மேல் உண்டியல் வருவாய் கிடைக்கும். இதுதவிர, லட்டு விற்பனை, தரிசன டிக்கெட் விற்பனை, கல்யாண மண்டப வாடகை, தலை முடி ஏலம் என ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்து வந்தது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கான வருவாயும் 40சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

இதனால், நடப்பு நிதியாண்டுக்கு 2,937 கோடி ரூபாய் என கணக்கீடப்பட்டு பட்ஜெட் போடப்பட்ட நிலையில், வருவாய் குறைந்துள்ளதால் பட்ஜெட்டை மறு சீரமைப்பு செய்து தொகையை குறைக்க தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY