முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை..! -உபரி நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோவை மேட்டுப்பாளையம் பில்லூர் அணையிலிருந்து 14 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக கேரள மாநில எல்லைப்பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது.
குந்தா அணையிலிருந்து திறக்கப்படும் நீர் பில்லூர் அணையை வந்தடைவதால் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments