அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம்
அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு 10 இடங்களில் கிணறு அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடத்தெருவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சர்வதேச ஏலத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என அக்கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில்தான், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments