”டிஆர்டிஓ தயாரித்த மருந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துகிறது” -ஆய்வில் தகவல்
மத்திய அரசு நிறுவனமான டிஆர்டிஓ தயாரித்த 2-DG என்ற மருந்து அனைத்து வகையான கொரோனா கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்துடன் இணைந்து 2-DG என்ற மருந்தை தயாரித்துள்ளது.
இந்த மருந்தில் உள்ள குளுக்கோஸ் கொரோனா வைரசில் கிளைகோலிசிசைத் தூண்டுவதால் அவை பெருகும் வேகம் கட்டுப்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவும் வேகம் குறைக்கப்படுகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Comments