டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அந்த மருத்துவமனையின் 9வது தளத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட ஊழியர்கள் அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 20 க்கும் மேற்பட்டவர்கள் விரைந்து செயல்பட்டு பற்றி எரிந்த நெருப்பை அணைத்தனர்.
நெருப்பு எரிந்த பகுதியில் நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Comments