தமிழகத்தில் வழக்கம்போல் மின் கணக்கிடும் பணிகள் தொடக்கம்..! மின்வாரியம் அறிவித்த சலுகைகள் ஜூன் 15 வரை மட்டுமே பொருந்தும் என விளக்கம்

0 16015
தமிழகத்தில் வழக்கம்போல் மின் கணக்கிடும் பணிகள் தொடக்கம்..! மின்வாரியம் அறிவித்த சலுகைகள் ஜூன் 15 வரை மட்டுமே பொருந்தும் என விளக்கம்

மிழகத்தில் மின் கணக்கிடும் பணிகள் இனி வழக்கம் போல் நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலையால் மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முந்தைய மாத மின் கட்டணம், குறிப்பிட்ட மாதத்துக்கான 2019ம் ஆண்டு செலுத்திய கட்டணம் அல்லது கணக்கீட்டுத் தரவுகளை உதவி செயற்பொறியாளரிடம் நுகர்வோர் அளிப்பதன் மூலம் கட்டணத்தை மாற்றியமைப்பது போன்ற வசதிகளை மின்வாரியம் வழங்கியிருந்தது.

இந்த சலுகைகள் ஜூன் 15ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மின் கணக்கீடு செய்யும் பணிகள் இனி வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments