டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனம், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களை இயக்கத் தடை; மீறினால் ரூ.10,000 அபராதம் -டெல்லி அரசு
டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை விடுத்துள்ள அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ வைத்திருந்தால் அவற்றை உரிமையாளர்கள் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 600 வாகனங்களே காயலான் கடைக்கும் வருகின்றன. ஆனால் வாகன ஆய்வாளர்கள் கணக்கீட்டின்படி நகரத்திற்குள் மட்டும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments