ஜம்மு காஷ்மீரில் 4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை 11 நாட்களுக்குப் பின் பிடிபட்டது
ஜம்மு காஷ்மீரில் 4 வயது சிறுமியைக் கடித்துக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது. இம்மாதம் 3ஆம் தேதி புட்கம் (Budgam) மாவட்டத்தில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது.
அடுத்த நாள் சிறுமியின் சடலம் கடித்து குதறப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, தானியங்கி கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.
11 நாட்களாக வனத்துறையினருக்கு தண்ணி காட்டிய சிறுத்தை இன்று கூண்டில் சிக்கியது. அதனை டச்சிகம் ((Dachigam)) உயிரியல் பூங்காவிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
Comments