11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகளுக்கு சேர்க்கை நடத்துவது எப்படி? பள்ளிக்கல்வித் துறை அறிவிக்கை
நடப்பு கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளில் மாணவர்களை எந்த அடிப்படையில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2019-20 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தால் அவற்றில் அதிகப்படியாக பெற்ற மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தேர்விலும் பங்கேற்று எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ அந்த பாடத்திற்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணான 35ஐ வழங்க வேண்டும். இந்த இரண்டு தேர்வையும் எழுதாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 35 ஐ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments