கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் அடங்கி உள்ளதா? -RTI கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

0 4908

பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பில், புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தடுப்பூசி கடைசியாக பயன்பாட்டுக்கு வரும் போது அதில் அந்த சீரம் இருக்காது என்றும் அரசு தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது..

இது குறித்த RTI பதிலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கன்றுக்குட்டியின் உடலில் இருந்து எடுக்கப்படும் சீரத்தை வைத்து, வேரோ செல்கள் என்ற உயிருள்ள செல்கள் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் வேரோ செல்கள் நீர் மற்றும் வேதி பொருளால் சுத்திகரிக்கப்பட்டு அதில் உள்ள கன்றுக்குட்டிகளின் சீரம் நீக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் அந்த செல்களில் கொரோனா வைரசின் பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக, சொல்லப்படுகிறது. வைரஸ் வளரும் போது வேரோ செல்கள் முற்றிலுமாக அழிந்து விடுகின்றதாக கூறப்படுகின்றது.

பிறகு வைரஸ் கொல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, செயலற்ற வைரசில் இருந்து தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு முழுமை அடையும் போது அதில் கன்றுக்குட்டியின் சீரம் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments