தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் புகார்

0 4888

தமிழகத்தில் சுமார் 1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகள்  மறைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள ஆய்வு குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த அறிக்கையில், அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வில் கொரோனா உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தவறானவை, திரிக்கப்பட்டவை என்பது உறுதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய நிதியுதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற ராமதாஸ், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழந்த அனைவரின் இறப்புக்கான காரணங்களையும் ஆய்வு செய்து, கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு மருத்துவச் சான்றிதழை வழங்க வல்லுநர்களைக் கொண்ட விசாரணை குழுவை அமைக்கவும் கேட்டுகொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments