சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து 13 உறுப்பினர்களைக் கொண்ட குழு தீர்மானித்துள்ளதாக தகவல்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது என்பது குறித்து 13 உறுப்பினர்களைக் கொண்ட குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது என்பதற்காக 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நிர்வாகம் அமைத்தது.
இந்தக் குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்தையும் கேட்டறிந்தனர். இந்நிலையில் 30:30:40 என்ற விகிச்சாரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க முடிவெடுத்திருப்பாகக் கூறப்படுகிறது.
இதன்படி,சிபிஎஸ்இ மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பின் இறுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் தலா 30 விழுக்காடும், 12ம் வகுப்பில் உள்ளீட்டுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 40 விழுக்காடும் இணைத்து மொத்தமாக 100 விழுக்காட்டுக்கு மதிப்பெண்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments