கீழடியில் நடைபெறும் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள்... பண்டைக்கால மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

0 2835

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் ஏழாம் கட்ட அகழாய்வின் போது பண்டைக்கால மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. 

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் இந்த மாதம் எட்டாம் தேதியில் இருந்து கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூரில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மணலூரில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு வரும் போது ஒரு குழியில்  எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

இதனை அடுத்து அந்த எலும்புக்கூட்டை முழுமையாக தோண்டி எடுத்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments