காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு
காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அத்தொகுதியில் துரைமுருகனை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் ராமு என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தலில் தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை எனவும் அவர் மனுவில் கூறியுள்ளார்.
தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும், மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என மனுவில் ராமு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Comments