பல மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாதலமான தாஜ் மஹால்..!
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றான தாஜ் மஹால், பல மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக, நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு கிடந்த நிலையில், தற்போது நாடெங்கிலும் படிப்படியாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மஹால் உள்ளிட்ட 3,693 நினைவுச்சின்னங்கள், மற்றும் 50 அருங்காட்சியகங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
இதனிடையே, தாஜ்மஹாலுக்குள் ஒரு நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் ஆன்லனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் நடைபெறும் என்றும் ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments