தங்க நகையின் தரத்தை குறிக்கும் ஹால் மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் - மத்திய அரசு

0 4672
தங்க நகையின் தரத்தை குறிக்கும் ஹால் மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் - மத்திய அரசு

தங்க நகையின் தரத்தை குறிக்கும் ஹால் மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முதற்கட்டமாக 256 மாவட்டங்களில்  இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சிறந்த பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹால் மார்க் முத்திரை மூலம் இந்தியாவை ஒரு உலகளாவிய தங்க சந்தை மையமாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments