யூடியூபர் மதனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 159 புகார்கள்!

0 12494

பப்ஜி விளையாட்டினைப் பயன்படுத்தி ஆபாசமாகப் பேசியதாக யூ ட்யூபர் மதன் மீது தமிழகமெங்கும் கிட்டத்தட்ட 159 புகார்கள் குவிந்துள்ளன.

பப்ஜி விளையாட்டு மூலம் தனியாக சாட்டிங் செய்து சிறுமிகளிடமும், பெண்களிடமும் ஆபாசமாக பேசிய யூடியூபர் மதன் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. மதன் குறித்து தற்போது புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை தேடி வருகிறார்கள்.

மதன், சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்  என்பது விசாரணையில் தெரியவந்ததால் சென்னை தனிப்படை போலீசார்  சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மதன் மீது பல்வேறு மாவட்டங்களில் இருந்து 159 புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு ஆன் லைன் மூலமாக வந்துள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments