நடிகையைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு

0 3750
நடிகையைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு

டிகையைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கரு கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது மலேசியாவைச் சேர்ந்த நடிகை புகார் கூறினார்‍.

இந்த வழக்கை சென்னை அடையாறு போலீசார் விசாரித்து வரும் நிலையில், முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் முறையிட்டிருந்தார்.

அவருக்கு முன் ஜாமீன் வழங்க நடிகை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் மணிகண்டன் முன் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments