காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

0 2693
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று  தண்ணீர் திறக்கப்படுகிறது. 

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக இன்று கல்லணையை சென்றடைந்தது. இன்று கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த தண்ணீர் கல்லணைக் கால்வாய், வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆறு வழியாக பாய்ந்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும்.

தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 16 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கல்லணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments