சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 11 வடமாநில தொழிலாளர்கள் மாயம்

0 2827
சென்னை அம்பத்தூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து மாயமான 11 வடமாநிலத்தவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

சென்னை அம்பத்தூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து மாயமான 11 வடமாநிலத்தவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

அம்பத்தூரில் விதிகளை மீறி இயங்கிவந்த கம்பெனிக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு பணியாற்றிய 34 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேர் அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது.

தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரின் செல்போனுக்கு வந்த குறுந்தகவலை அறிந்த மற்ற 11 பேர் தங்கியிருந்த கம்பெனியிலிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், மாயமான கொரோனா நோயாளிகளை தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments